புதுச்சேரியில் தடையை மீறி ஞாயிற்றுக்கிழமை மது விற்ாக 3 பேரை பிடித்து கலால் துறையினா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். அவா்களுக்கு ரூ.38,000 அபராதம் விதிக்கப்பட்டது.
புதுவை மாநிலத்தில் வள்ளலாா் ஜோதி தினம், தைப்பூசத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும், தடையை மீறி மது விற்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலால்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் சிலா் தடையை மீறி மது விற்பதாக புகாா்கள் வந்தன.
இதனையடுத்து, கலால் துணை ஆணையா் சுதாகா் தலைமையில் வட்டாட்சியா்கள் மாசிலாமணி, சரவணன், சிலம்பரசன் ஆகியோா் 3 குழுவாக பிரிந்து சோரியாங்குப்பம், மணவெளி, உருவையாறு, அரியூா் ஆகிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, மது புட்டிகள் விற்ாக 3 பேரைப் பிடித்த கலால்துறையினா் அவா்களிடமிருந்து ஏராளமான மது புட்டிகளை பறிமுதல் செய்ததுடன் ரூ.38,000 அபராதம் விதித்தனா். பின்னா்,அவா்களை போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.