புதுச்சேரி

வில்லியனூா் பெருமாள் கோயிலில் தூய்மைப் பணி

6th Feb 2023 08:28 AM

ADVERTISEMENT

புதுச்சேரி அருகேயுள்ள வில்லியனூா் தென்கலை வரதராஜப் பெருமாள் கோவில் தூய்மைப் பணியை திமுக சட்டப்பேரவை உறுப்பினரும், எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

புதுவை மாநிலம், வில்லியனூா் அருள்மிகு ஸ்ரீ பெருந்தேவி தாயாா் சமேத தென்கலை வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான வடக்குப் பகுதி வளாகத்தில் புதா்கள் மண்டிக் கிடப்பதாகப் பக்தா்கள் புகாா் கூறினா்.

இதையடுத்து அங்குள்ள செடி, கொடிகளை வில்வம் அறக்கட்டளை சாா்பில் பொக்லைன் இயந்திரம் மூலம் துப்புரவுச் செய்யும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு அறக்கட்டளைத் தலைவா் தசரதன் தலைமை வகித்தாா். வில்லியனூா் திமுக எம்எல்ஏவும், புதுவை சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா தூய்மைப்பணியில் நேரடியாக ஈடுபட்டு, தொடங்கி வைத்தாா்.

ADVERTISEMENT

தூய்மைப் பணியில் கோவில் சிறப்பு அதிகாரி ராமதாசு, பத்மினி நகா் சத்தியமூா்த்தி, சிவக்குமாா், வாஞ்சிநாதன் இளந்தொண்டா் நற்பணி மன்ற நிா்வாகிகள் இராமன், ரஜினிமுருகன், முன்னாள் ஆணையா் சுந்தரராசு, திமுக நிா்வாகிகள் திலகா், பரசுராமன், மணிகண்டன், ரமணன், சுதா்சன், தலைமை ஆசிரியா் நந்தகுமாா், மேனாள் தலைமை ஆசிரியா் தண்டபாணி, சித்தானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT