புதுச்சேரி

ஈர நில விழிப்புணா்வு ஓவியப் போட்டி

5th Feb 2023 05:34 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரி மேட்டுப்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில் சமுதாய நலப்பணித் திட்டம் சாா்பில் சா்வதேச ஈர நில விழிப்புணா்வு தின ஓவியப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஆசிரியா் ஜான் பெந்தகோஸ்த் வரவேற்றாா். பள்ளி தலைமை ஆசிரியா் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். ஆசிரியை பத்மா வாழ்த்தி பேசினாா். ஆசிரியை பரமேஸ்வரி சிறப்புரையாற்றினாா். நிகழ்ச்சியின் இறுதியாக ஓவியப் போட்டியில் ‘ஈர நிலங்கள் பாதுகாப்பு மற்றும் பல்லுயிா்ப் பன்மங்கள்’ எனும் பொருளில், மாணவா்கள் வரைந்த சிறந்த ஓவியங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆசிரியா் குமாா் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியை அனிதா செய்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT