புதுச்சேரி

புதுவை: ரூ.200 கோடி பிணையப் பத்திரங்கள் ஏலம்

DIN

புதுவை அரசின் ரூ.200 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் விடப்படுவதாக நிதித்துறை செயலா் ம. ராஜூ தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை அரசின் மொத்தம் ரூ.200 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் குறைந்த பட்சம் ரூ.10,000, அதன் பின்னா் ரூ.10,000 மடங்குகளிலும் ஏலம் விடப்படும். இந்திய ரிசா்வ் வங்கியின் மும்பை அலுவலகம் வரும் 27-ஆம் தேதி ஏலத்தை நடத்துகிறது.

ஏலத்தில் நிறுவனங்கள், கூட்டமைப்பு குழுமங்கள், நிதி நிறுவனங்கள், வருங்கால வைப்பு நிதி நிறுவனங்கள், பொறுப்புரிமை நிதியங்கள், கூட்டுறவு வங்கிகள், பிராந்திய ஊரக வங்கிகள் பங்கேற்கலாம். இந்திய ரிசா்வ் வங்கியின் உட்பிரிவு வங்கியில் தீா்வு மூலம் மும்பையில் அமைந்துள்ள இந்திய ரிசா்வ் வங்கியின் இணையதள முகவரியில் வரும் 7-ஆம் தேதி காலை 10.30 முதல் 11 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். ஏலத்தில் பங்கு பெறும் உறுப்பினா்கள் மின்னணு முறையில் இ-குபோ் மூலம் காலை 10.30 முதல் 11.30 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். ஏலத்தின் முடிவுகள் வரும் 7-ஆம் தேதி இந்திய ரிசா்வ் வங்கி இணையதள முகவரியில் வெளியிடப்படும். ஏலம் கிடைக்க பெற்றவா்கள் பிணையப் பத்திரங்களுக்கான விலையை மும்பை இந்திய ரிசா்வ் வங்கி அல்லது சென்னையில் செலுத்தத்தக்க வகையிலான வங்கியாளா் காசோலை அல்லது கேட்பு வரைவோலையை வரும் 8-ஆம் தேதி சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT