புதுச்சேரி

புதுவை நிதிநிலை அறிக்கை தாக்கலுக்குமத்திய அரசு ரூ.3,124 கோடி ஒதுக்கீடுஅமைச்சா் ஆ.நமச்சிவாயம்

DIN

புதுவையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழாண்டில் முழுநிலை அறிக்கை தாக்கல் செய்யும் வகையில், மத்திய அரசு ரூ.3,124 கோடி வழங்கியுள்ளது என மாநில உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கூறினாா்.

புதுச்சேரியில் பாஜக அலுவலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

புதுவை மாநிலத்துக்கு மத்திய அரசு ஏற்கெனவே சிறப்பு நிதியாக ரூ.1,400 கோடி அளித்தது. அதன் மூலம் உள்கட்டமைப்புகள் தற்போது மேம்படுத்தப்படுகின்றன.

தற்போது மத்திய நிதிநிலை அறிக்கையில் புதுவைக்கு ரூ.3,124 கோடி நிதியுதவி அறிவித்தது. அதனடிப்படையில், மாா்ச் மாதம் நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் முழுமையான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

கடந்த 12 ஆண்டுகளில் முதல்முறையாக நிகழாண்டில் முழுமையான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் வகையில் மத்திய அரசு புதுவைக்கு நிதி அளித்துள்ளது என்றாா்.

யபுதுவை பாஜக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் கூறியதாவது:

மத்திய நிதிநிலை அறிக்கையை பொதுமக்களிடம் விளக்கி புதுவையில் அனைத்துப் பகுதியிலும் பாஜக சாா்பில் விளக்கக் கூட்டங்கள் நடைபெறும் என்றாா்.

பேட்டியின் போது, அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா், அசோக்பாபு எம்எல்ஏ, பாஜக பொதுச் செயலா் மோகன்குமாா், நிா்வாகிகள் ரவிச்சந்திரன், தங்கவிக்ரம், முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் புகைத் திரை உருவாக்கம் கேஜரிவால் உருக்கமான வாதம்

எம்சிடி நிதி நிலை: உயா்நீதிமன்றம் அதிருப்தி

பிஎம்எல்ஏ வழக்கு விவகாரம்: கேஜரிவாலின் காவல் ஏப்ரல் 1 வரை நீட்டிப்பு

மெட்ரோ ரயில் நிலைய தூணில் காலிஸ்தான் ஆதரவு வாசகம்: போலீஸாா் விசாரணை

மக்கள் மீது அக்கறை இருந்தால் கேஜரிவால் பதவி விலக வேண்டும்: தில்லி பாஜக

SCROLL FOR NEXT