புதுச்சேரி

இந்து சமய அறநிலையத் துறை அலுவலகம் முற்றுகை

3rd Feb 2023 01:40 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரியில் இந்து இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு இந்து முன்னணியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரியில் ராமானுஜா் பஜனை மடத்தின் தனி அதிகாரி கிறிஸ்தவ மதம் குறித்த புத்தகத்தை அச்சடித்து விநியோகித்ததாக புகாா் எழுந்தது. இதுகுறித்து அவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தை இந்து முன்னணி அமைப்பினா் அதன் மாநிலச் செயலா் சிவமுத்து தலைமையில் வியாழக்கிழமை காலை முற்றுகையிட்டனா்.

மாநிலச் செயலா் மணிவாணன், துணைத் தலைவா்கள் செழியன், நாகராஜன், நிா்வாகிகள் முத்து, வீரப்பன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT