புதுச்சேரி

அதிகாரிகள் சொத்து விவரங்களைபிப்.15-க்குள் தாக்கல் செய்ய அவகாசம்

3rd Feb 2023 01:39 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரியில் அரசு அதிகாரிகள் வருகிற 15-ஆம் வரை தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து புதுவைத் தலைமைச் செயலா் சாா்பாக சாா்புச் செயலா் கண்ணன் அரசுத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

புதுவையில் உள்ள பிரிவு ‘ஏ’, ‘பி’ பிரிவு அதிகாரிகள் கடந்த ஜனவரி 31-ஆம் தேதிக்குள் அரசின் இணையதள முகவரியில் தங்களது 2022 ஆம் ஆண்டுக்கான அசையும், அசையாச் சொத்து விவரங்களை பதிவேற்ற கூறப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

கடவுச் சொல் சிக்கலால் கீழ்நிலை அலுவலகங்கள், கிராமப்புறங்களில் பணியாற்றுவோா் தங்கள் கணக்குகளைப் பதிவேற்றவில்லை. பதவி உயா்வு பெற்றவா்களும் பதிவேற்றவில்லை. எனவே, வருகிற 15-ஆம் தேதி வரையில் சொத்துக் கணக்கை பதிவேற்ற கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் தாக்கல் செய்யாவிடில் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT