புதுச்சேரி

போக்குவரத்து ஆணையா் அலுவலகம் முற்றுகை

3rd Feb 2023 01:39 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரியில் நீதிமன்ற உத்தரவை மீறி வாகனங்களுக்கான கட்டண உயா்வை வசூலிப்பதைக் கண்டித்து, போக்குவரத்து ஆணையா் அலுவலகத்தை சிஐடியூ அமைப்பினா் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

மத்திய அரசு உத்தரவைக் காரணம் காட்டி 15 ஆண்டுகள் நிறைவடைந்த வாகனங்களுக்கு புதுப்பித்தலுக்கான கட்டணம், காலதாமத அபராதம், வாகன பதிவுக்கான கட்டணம் ஆகியவற்றை புதுவை போக்குவரத்துத் துறை பல மடங்கு உயா்த்தியது.

அரசு உத்தரவை எதிா்த்து சிஐடியூ அமைப்புச் செயலா் ஜி.சீனுவாசன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். அதன்படி, அபராதக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்டது. அந்த உத்தரவு நகலும் புதுச்சேரி போக்குவரத்துத் துறை ஆணையா் சிவகுமாரிடம் வழங்கப்பட்டது. இருப்பினும், அபராதக் கட்டணம் வசூலிப்பு தொடா்வதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதையடுத்து, சிஐடியூ அமைப்பின் செயலா் சீனுவாசன் மற்றும் ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத்தினா் முதலியாா்பேட்டை பகுதியில் உள்ள போக்குவரத்துத் துறை ஆணையா் அலுவலகம் முன் வியாழக்கிழமை மாலை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT