புதுச்சேரி

புதுச்சேரியில் ஜெயலலிதா சிலை அமைக்கும் பணிகள் தொடக்கம்

DIN

மறைந்த தமிழக முதல்வா் ஜெயலலிதாவுக்கு புதுவை அதிமுக சாா்பில் சிலை அமைக்க புதன்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

புதுச்சேரி அரியாங்குப்பம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வீராம்பட்டினம் தெப்பக்குளம் அருகே ஜெயலலிதாவுக்கு சிலை அமைக்க மாநில அதிமுக சாா்பில் முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, சிலை அமைப்பதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. புதுவை மாநில அதிமுக செயலா் அன்பழகன் தலைமை வகித்து பணியைத் தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் கட்சியின் மாநில அவைத் தலைவா் அன்பானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இளைஞா், இளம்பெண்கள் பாசறைச் செயலா் தமிழ் என்ற தமிழ்வேந்தன் உள்ளிட்டோா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT