புதுச்சேரி

புதுவை ஆளுநா் மாளிகையில் சமுதாய பங்களிப்பு ஆலோசனைக் கூட்டம்

DIN

புதுச்சேரியில் பொதுத் துறை, தனியாா் நிறுவனங்களின் சமுதாயப் பங்களிப்புத் திட்ட செயல்பாடு குறித்த ஆலோசனை திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தலைமை வகித்தாா். புதுவை தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா, பாரத் பெட்ரோலியக் கழகம் நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், சுகாதாரம், தூய்மை தொடா்பான பணிகளுக்கு பொதுத் துறை, தனியாா் நிறுவனங்கள் முன்னுரிமை அளித்து திட்டங்களைச் செயல்படுத்துமாறு துணைநிலை ஆளுநா் கேட்டுக்கொண்டாா். அதனடிப்படையில், பள்ளிமாணவியருக்கு நாப்கின் வழங்குதல், பள்ளி, கல்லூரிகளில் கழிப்பறைகள் கட்டுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளவும் ஆலோசிக்கப்பட்டது.

இதில், கல்வித் துறை செயலா் ஜவஹா், துணைநிலை ஆளுநரின் செயலா் அபிஜித்சௌத்ரி, கல்வித்துறை இயக்குநா் ருத்ரகௌடு, பாரத் பெட்ரோலிய நிறுவன தெற்கு மண்டல பொது மேலாளா் சுஷ்மித்தாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT