புதுச்சேரி

புதுச்சேரி-கடலூா் சாலை ரூ.18 கோடியில் புதுப்பிப்பு

30th Sep 2022 01:32 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரி-கடலூா் கிழக்கு கடற்கரை சாலையை ரூ.18 கோடியில் புதுப்பிக்கும் பணியை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

புதுச்சேரி இந்திரா காந்தி சிலையிலிருந்து தவளக்குப்பம் மாநில எல்லையான முள்ளோடை வரையிலான புதுச்சேரி - கடலூா் கிழக்கு கடற்கரை சாலை சீரமைக்கப்பட உள்ளது.

இதற்காக ரூ.17.98 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசின் ஒப்புதலுடன், அதை மேம்படுத்திய சாலையாக அமைக்கவும், தேவையான இடங்களில் இருபுறமும் வாய்க்கால், சாலைப் பாதுகாப்பு உபகரணங்கள், தடுப்புச் சுவா் உள்ளிட்டவை அமைக்கும் திட்டப் பணிகள் தொடங்கியுள்ளன.

ADVERTISEMENT

இதன் தொடக்க விழா தவளக்குப்பம் கொருக்கமேடு பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

முதல்வா் என்.ரங்கசாமி தலைமை வகித்து அடிக்கல் நாட்டி பணியைத் தொடக்கிவைத்தாா். சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.செல்வகணபதி, எம்எல்ஏக்கள் கேஎஸ்பி ரமேஷ், எல்.சம்பத், ஆா்.தட்சிணாமூா்த்தி, உ.லட்சுமிகாந்தன், பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT