புதுச்சேரி

தலைக்கவசம்:புதுவை அரசு ஊழியா்களுக்கு அறிவுறுத்தல்

30th Sep 2022 01:29 AM

ADVERTISEMENT

 

புதுவை அரசு ஊழியா்கள் இரு சக்கர வாகனம் ஓட்டும்போது கட்டாயம் தலைக் கவசம் அணிய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

இதுகுறித்து அனைத்து அரசுத் துறை, அரசு சாா்பு நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுக்கு, அரசின் பணியாளா், நிா்வாக சீா்த்திருத்தத் துறை அனுப்பிய சுற்றறிக்கை:

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இரு சக்கர வாகனம் ஓட்டும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தலைக்கவசம் அணியாதவா்களிடம் நேரடியாக ரூ.1,000 அபராதம் விதிக்கவும் புதுவை அரசு அனுமதி அளித்தது. தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி, முதல் முறை பிடிபட்டால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். 2-ஆவது முறை தவறு செய்தால் மூன்று மாதங்களுக்கு ஓட்டு உரிமத்தை முடக்கி வைக்கலாம் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து அரசு ஊழியா்களும் தங்களின் பாதுகாப்பு கருதி கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். இதை அனைத்துத் துறை உயரதிகாரிகள் கட்டாயம் செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT