புதுச்சேரி

புதுச்சேரியில் மீன் வியாபாரிகள் சாலை மறியல்

30th Sep 2022 01:31 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் மீன் வியாபாரிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி பெரிய கடை சந்தைப் பகுதியில் குபோ் மீன் அங்காடி செயல்பட்டு வந்தது. இதன் முன் சாலையில் மீன்களைக் கொட்டி ஏலம் விடப்படும். இதனால், அந்தப் பகுதியில் துா்நாற்றம் வீசுவதாக கூறப்பட்ட நிலையில், புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் புதிதாக செயல்படும் நவீன மீன் அங்காடி மையத்தில் ஏலம், விற்பனை செய்ய உத்தரவிட்டு, இடம் மாற்றம் செய்யப்பட்டது.

மாவட்ட நிா்வாகம், நகராட்சி உத்தரவிட்டும், மீன் வியாபாரிகள் அங்கு செல்லாமல் பெரியகடை பகுதியிலேயே மீன்களை ஏலம் விட்டு வருகின்றனா். அக்.1-ஆம் தேதி முதல் பெரிய கடை பகுதியில் மீன்களை ஏலம் விடக்கூடாது, மொத்த வியாபாரம் செய்யக் கூடாது என புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் இ.வல்லவன் உத்தரவு பிறப்பித்திருந்தாா்.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, வியாழக்கிழமை காலை மீன் விற்பனையில் ஈடுபடாமல் 300-க்கும் மேற்பட்ட மீன் வியாபாரிகள், பெரிய கடை பகுதி நேரு வீதி-காந்தி வீதி சந்திப்பில் அமா்ந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மறியலில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

பெரிய கடை போலீஸாா் விரைந்து வந்து, மீன் வியாபாரிகளை சமாதானப்படுத்தியதையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT