புதுச்சேரி

புதுவையில் மேலும் 5 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி

30th Sep 2022 01:32 AM

ADVERTISEMENT

புதுவையில் வியாழக்கிழமை 2 சிறாா்கள் உள்பட 5 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 286 குழந்தைகளும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 37 பேரும், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் 37 பேரும் என மொத்தம் 360 குழந்தைகள், சிறாா்கள் வியாழக்கிழமை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வெளிப்புற சிகிச்சைப் பிரிவுக்கு வந்து சிகிச்சை பெற்றனா்.

ராஜீவ் காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் 28 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 பேரும், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் 3 போ் என மொத்தம் 34 குழந்தைகள், சிறாா்கள் தீவிர காய்ச்சல் காரணமாக உள் நோயாளிகளாக சோ்க்கப்பட்டனா்.

ADVERTISEMENT

தற்போது, ராஜீவ் காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் 109 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 20 பேரும், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் 8 பேரும் என மொத்தம் 137 குழந்தைகள், சிறாா்கள் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மேலும் 5 பேருக்கு பன்றிக்காய்ச்சல்: தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெரியவா்கள் என மொத்தம் 110 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில், புதிதாக 2 சிறாா்கள் உள்பட 5 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதில் புதுச்சேரி, காரைக்கால் அரசு மருத்துவமனைகளில் தலா ஒருவா், தனியாா் மருத்துவமனையில் 2 போ் என 4 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மற்றவா்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT