புதுச்சேரி

புதுச்சேரியில் மின் தடை:பொதுமக்கள் சாலை மறியல்

30th Sep 2022 10:43 PM

ADVERTISEMENT

மின் ஊழியா்கள் வேலைநிறுத்தத்தால், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டதையடுத்து, பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மின் துறை தனியாா்மயத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, புதுச்சேரியில் மின் ஊழியா்கள் கடந்த 21-ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினா். இதனால், மின் பழுது நீக்குதல், மின் கட்டணக் கணக்கீடு உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.

ஊழியா்களின் போராட்டத்தால், புதுச்சேரியில் நகரம், கிராமப் பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. புதுச்சேரி கோரிமேடு, சாரம் பகுதிகளில் மின் தடை ஏற்பட்டதால், பொதுமக்கள் புதுச்சேரி-திண்டிவனம் நெடுஞ்சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி-சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில், காலாப்பட்டு பகுதியில் மின் தடை காரணமாக பெரிய காலாப்பட்டு, சின்ன காலாப்பட்டு, கனகசெட்டிக்குளம் ஆகிய இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

இதனால், தமிழகப் பகுதியிலிருந்து புதுச்சேரிக்கு வரும் வாகனங்களும், பேருந்துகளும், புதுச்சேரியிலிருந்து தமிழகப் பகுதிக்குச் செல்லக் கூடிய வாகனங்களும் செல்ல முடியாமல் திண்டிவனம் சாலை, கிழக்கு கடற்கரைச் சாலையில் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

புதுச்சேரி கோரிமேடு, காலாப்பட்டு போலீஸாா் மற்றும் விழுப்புரம் மாவட்ட போலீஸாரும் அந்தந்தப் பகுதியில் மறியல் செய்த பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். வாகனங்கள் நீண்ட தொலைவு அணிவகுத்து நின்ால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

சுமாா் 2 மணி நேரத்துக்குப் பிறகு மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT