புதுச்சேரி

புதுவை விவசாயிகளுக்கு விரைவில் மழை நிவாரணம்

29th Sep 2022 02:01 AM

ADVERTISEMENT

 

புதுவையில் பலத்த மழையால் பயிா்கள் சேதமடைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இரண்டாம் கட்ட நிவாரணத் தொகை ஒரு வாரத்தில் வழங்கப்படுமென வேளாண் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுவையில் கடந்த ஆண்டு வட கிழக்கு பருவமழையின் போது நவம்பா், டிசம்பா் மாதங்களில் பெய்த பலத்த மழையால் சேதமடைந்த நெல், காய்கறி பயிா்களுக்கு நிவாரணத் தொகையாக ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வீதம் வழங்கப்படும் முதல்வா் அறிவித்தாா்.

ADVERTISEMENT

அதன்படி, விவசாயிகளுக்கு ரூ.7 கோடியே 10 லட்சத்து 57 ஆயிரத்து 600 நிவாரணத் தொகை வழங்க அரசு ஆணை வெளியிடப்பட்டு, கடந்த மாா்ச் மாதம் வழங்கப்பட்டது.

இரண்டாம் தவணையாக கரும்பு, பப்பாளி சாகுபடி செய்து மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் வீதம் வழங்க முதல்வா் உத்தரவு பிறப்பித்தாா். அதன்படி, புதுச்சேரியில் 871 விவசாயிகளுக்கு ரூ. 93.24 லட்சமும், காரைக்கால் பகுதியில் நெல் சாகுபடி செய்த 4,248 விவசாயிகளுக்கு ரூ. 2.30 கோடி வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிவாரணத் தொகை ஒரு வாரத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றாா் அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT