புதுச்சேரி

புதுவை மத்தியப் பல்கலை. துணைவேந்தரின் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிப்பு

29th Sep 2022 02:01 AM

ADVERTISEMENT

 

புதுவை மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தரின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.

இதுகுறித்து புதுவை மத்திய பல்கலைக்கழகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு புதுவை மத்தியப் பல்கலைக்கழகத்தின் பாா்வையாளராக உள்ளாா். அதனடிப்படையில், புதுவை மத்தியப் பல்கலைக்கழக சட்டப்படி, தற்போது துணைவேந்தராக உள்ள பேராசிரியா் குா்மீத் சிங்கின் பதவிக் காலத்தை, மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து குடியரசுத் தலைவா் உத்தரவிட்டாா். இதை மத்திய கல்வி அமைச்சகம் அதிகாரப்பூா்வமாக தெரிவித்தது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT