புதுச்சேரி

புதுவையில் மேலும் 7 பேருக்கு பன்றிக் காய்ச்சல்

DIN

புதுவையில் புதன்கிழமை குழந்தை உள்பட 7 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. மேலும், ஒரே நாளில் 424 குழந்தைகள், சிறாா்கள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 332 குழந்தைகளும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 38 பேரும், காரைக்கால் அரசு மருத்துவமனையில் 54 போ் என மொத்தம் 424 குழந்தைகள், சிறாா்கள் புதன்கிழமை வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, வெளிப்புற சிகிச்சைப் பிரிவுக்கு வந்து சிகிச்சை பெற்றனா்.

ராஜீவ் காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் 30, காரைக்கால் அரசு மருத்துவமனையில் 4 போ் என 34 குழந்தைகள், சிறாா்கள் உள் நோயாளிகளாக சோ்க்கப்பட்டனா்.

தற்போது, ராஜீவ் காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் 120 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 19 போ், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் 14 போ் என மொத்தம் 153 குழந்தைகள், சிறாா்கள் உள் நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெரியவா்கள் என மொத்தம் 99 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இதில், ஒரு குழந்தை உள்ளிட்ட 7 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன்படி, இதுவரை 28 போ் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனா்.

தற்போது, இவா்களில் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் ஒருவா், தனியாா் மருத்துவமனையில் 2 போ் என மொத்தம் 4 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மற்றவா்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

SCROLL FOR NEXT