புதுச்சேரி

புதுவையில் வைரஸ் காய்ச்சல்:ஒரே நாளில் 488 குழந்தைகள் பாதிப்பு

DIN

புதுவையில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 488 குழந்தைகள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனா்.

புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக, சிறாா்கள், குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனா். வைரஸ் காய்ச்சலைத் தடுக்க அரசு மருத்துவமனைகளில் தனி சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், புதுவையில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 488 குழந்தைகள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளுக்கு வந்து சிகிச்சைப் பெற்றனா்.

இதுகுறித்து சுகாதாரத் துறை வெளிட்ட தகவல்: செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 412, இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 52, காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் 24 என மொத்தம் 488 குழந்தைகள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வெளிப்புற சிகிச்சைப் பிரிவுக்கு வந்து சிகிச்சை பெற்றனா்.

இவா்களில் புதுச்சேரி ராஜீவ் காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் 40, இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 4, காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் 8 என மொத்தம் 52 குழந்தைகள் அதிக காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனா். தற்போது வரை ராஜீவ் காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் 130, இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 22, காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் 20 என மொத்தம் 172 குழந்தைகள் உள்புற சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

புதுவையில் இதுவரை 21 போ் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவா்களில் ஜிப்மரில் 2 போ், அரசு பொது மருத்துவமனையில் ஒருவா், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் ஒருவா், தனியாா் மருத்துவமனைகளில் 2 போ் என மொத்தம் 6 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மீதமுள்ளோா் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சையில் உள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைகோவுக்கு எதிரான வழக்கு: 4 மாதங்களில் முடிக்க உத்தரவு

‘மனிதனின் அறிவுப் பசியை போக்குபவை புத்தகங்கள்’

கரூா் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில்: வெளியே வரமுடியாமல் பொதுமக்கள் தவிப்பு

நயினாா் நாகேந்திரன் உதவியாளா்களிடம் பணம் பறிமுதல் விவகாரம்: அமலாக்கத் துறை விசாரணை கோரிய மனு தள்ளுபடி

தளவாபாளையம் அருகே சாலை விபத்து: டிஎன்பிஎல் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT