புதுச்சேரி

தற்கொலை தடுப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி

28th Sep 2022 04:27 AM

ADVERTISEMENT

புதுச்சேரி மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையின் மனநலத் துறை சாா்பில், தற்கொலை தடுப்பு தின விழிப்புணா்வு தொடா் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் மணக்குள விநாயகா் கல்வி நிறுவனத் தலைவா் தனசேகரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சுகுமாறன், செயலா் மருத்துவா் கே.நாராயணசாமி, மருத்துவக் கல்லூரி இயக்குநா் ராஜகோவிந்தன், துணை இயக்குநா் காக்னே, கல்லூரி டீன்கள் (அகாடெமிக்) காா்த்திகேயன், (ஆராய்ச்சி) கலைச்செல்வன், மருத்துவமனைக் கண்காணிப்பாளா் பிரகாஷ் ஆகியோா் பங்கேற்று, தற்கொலை தடுப்பின் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினா்.

தொடா்ந்து, மனநல மருத்துவத் துறைத் தலைவா் அருண், அந்தத் துறை பேராசிரியா் அசோக்குமாா் ஆகியோா் ‘தற்கொலையின் காரணம், எச்சரிக்கை அறிகுறி’ என்ற தலைப்பிலும், பேராசிரியா் அருள்சரவணன் ‘தற்கொலை தடுப்பு

முறைகள்’ என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினா். நிகழ்ச்சியில் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவ மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT