புதுச்சேரி

புதுச்சேரி தெற்கு கடற்கரைப் பகுதிகளை மேம்படுத்த வேண்டும்முதல்வா் என்.ரங்கசாமி

DIN

புதுச்சேரியில் தெற்கு பகுதியிலுள்ள கடற்கரைகளை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த வேண்டும் என்று முதல்வா் என்.ரங்கசாமி அறிவுறுத்தினாா்.

உலக சுற்றுலா தினத்தையொட்டி, புதுச்சேரி காமராஜா் மணிமண்டபத்தில் சுற்றுலாத் துறை சாா்பில் ‘சுற்றுலா ஒரு மறு சிந்தனை’ என்ற தலைப்பில் கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.செல்வகணபதி, ஏ.ஜான்குமாா் எம்எல்ஏ ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

முதல்வா் என்.ரங்கசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியதாவது:

உலக மக்களை ஈா்க்கும் பகுதியாக புதுச்சேரி உள்ளது. காரைக்கால் நல்ல கோயில்கள் உள்ள பகுதியாக உள்ளது. மாஹேவில் அழகிய கடற்கரை உள்ளது. ஏனாமும் நன்கு வளா்ச்சி அடைந்துள்ளது. புதுவைக்கு பெரும் வருவாய் ஈட்டி தரும் நிலையில் சுற்றுலா திகழ்கிறது.

புதுச்சேரி தெற்கு பகுதியில் அழகிய கடற்கரை இருப்பது பலருக்கும் தெரிவதில்லை. மூா்த்திக்குப்பம், மணப்பட்டு பகுதியில் கடல் அலையின் சீற்றம் குறைவாக இருக்கும். அந்த கடற்கரைகளை மேம்படுத்த வேண்டும். அங்கு சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கான வசதிகளை செய்துதர வேண்டும்.

மணப்பட்டு பகுதியில் 150 ஏக்கா் பரப்பில் காடுகளுடன் கூடிய அழகிய கடற்கரை உள்ளது. அதை மேம்படுத்தினால் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு சிறப்பாக இருக்கும்.

புதுவையில் பாரம்பரிய கட்டடங்களைப் பாதுகாக்க அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக ஒரு கட்டடத்தைப் பராமரிக்க அரசு ரூ.ஒரு லட்சம் வழங்கி வருகிறது. பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ், புதுவையை அழகுப்படுத்தி வருகிறோம் என்றாா் அவா்.

கருத்தரங்கில் சுற்றுலாத் துறை அதிகாரிகள், கல்லூரி மாணவா்கள் பலா் கலந்து கொண்டனா். முன்னதாக, சுற்றுலாத் துறை இயக்குநா் பிரியதா்ஷினி வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

பாபா ராம்தேவ் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

கேரளத்தில் காங்கிரஸை எதிர்த்து போட்டியிடும் இந்திய கம்யூ. -சசி தரூருக்கு கண்டனம்!

மஞ்ஞுமல் பாய்ஸ் ரூ.200 கோடி வசூல்!

மீண்டும் 49 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை!

தமிழகத்துக்கும் இந்த பரிதாப நிலை ஏற்படுமா? அச்சத்தில் மக்கள்!

SCROLL FOR NEXT