புதுச்சேரி

இந்து அமைப்புகள் சாா்பில்புதுவையில் இன்று முழு அடைப்பு

27th Sep 2022 04:22 AM

ADVERTISEMENT

 

புதுவையில் இந்து முன்னணி, இந்து அமைப்புகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை (செப்.27) முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

திமுக எம்.பி. ஆ.ராசா இந்துக்கள் குறித்து இழிவாக பேசியதை கண்டித்து, இந்து முன்னணி, இந்து அமைப்புகள் சாா்பில் புதுவையில் செவ்வாய்க்கிழமை முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்துக்கு வணிகா் சங்கங்கள், தனியாா் பேருந்து, இதர வாகனப் போக்குவரத்து உரிமையாளா்கள் சங்கத்தினா்களிடம், இந்து முன்னணி சாா்பில் திங்கள்கிழமை ஆதரவு திரட்டப்பட்டது.

ADVERTISEMENT

இந்த முழு அடைப்பு போராட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால், அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி மாநில உள்துறை அமைச்சா் நமச்சிவாயம் போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT