புதுச்சேரி

புதுவையில் மேலும் 6 பேருக்குபன்றிக் காய்ச்சல்

27th Sep 2022 04:22 AM

ADVERTISEMENT

 

புதுவையில் திங்கள்கிழமை மேலும் 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உறுதியானது.

புதுச்சேரி, காரைக்காலில் திங்கள்கிழமை 354 போ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வந்தனா். இவா்களில் 181 போ் உள் நோயாளிகளாக சோ்க்கப்பட்டனா்.

தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 82 பேரின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டதில், 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ADVERTISEMENT

புதுவையில் ஞாயிற்றுக்கிழமை வரை 15 போ் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது, ஒரு குழந்தை உள்பட மேலும் 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 21-ஆக உயா்ந்தது. இதில், தற்போது 6 போ் அரசு மருத்துவமனைகளில் உள் நோயாளிகளாக சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT