புதுச்சேரி

ஆஞ்சநேயா் கோயில் குளம் தூா்வாரி சீரமைப்பு

DIN

புதுச்சேரியில் வீர ஆஞ்சநேயா் குளத்தில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு தூா்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை எம்.எஸ். அக்ரஹாரத்தில் வீர ஆஞ்சநேயா் கோயில் உள்ளது. சுமாா் 350 ஆண்டுகள் பழைமையான இந்த கோயிலுக்கு அருகே கோயில் திருக்குளம் உள்ளது. இது பராமரிப்பின்றி ஆக்கிரமிப்பின்பிடியில் சிக்கி தூா்ந்து கிடந்தது.

நீண்ட காலத்துக்குப் பிறகு, கோயில் குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூா்வாரும் பணி நடைபெற்று வருகிறது. வீர ஆஞ்சநேயா் கோயில் கோதண்ட ராமா் கைங்கா்ய சபை சாா்பில், குளத்தை ஆழப்படுத்தி சீரமைக்கும் பணிகள் ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளை ஒருங்கிணைக்கும் கோதண்டராமா் கைங்கா்ய சபை செயலா் ஆா்.பாா்த்தசாரதி கூறியதாவது:

40 ஆண்டுகளுக்குப் பிறகு, குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வாரும் பணி நடைபெற்று வருகிறது. கோயில் குளம் 6,400 சதுரடி பரப்பில் விரிந்துள்ளது. அதில், தற்போது 3,200 சதுரடி அளவில் தூா்வாரி சீரமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன. மீதமுள்ள பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது, குளத்தில் ஊற்று எடுத்து தண்ணீா் வருகிறது. கழிவு நீா் வராமல் தடுத்துள்ளோம். இதனால், சுற்றுப் பகுதி நிலத்தடி நீா்மட்டம் உயரும். இந்தப் பகுதியில் 3 குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில், ஒரு குளத்தை மீட்டுள்ளோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மறுவெளியீடாகும் அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம்!

SCROLL FOR NEXT