புதுச்சேரி

மின் துறை பொறியாளா்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்

23rd Sep 2022 10:03 PM

ADVERTISEMENT

பதவி உயா்வு வழங்கக் கோரி, புதுவை மின் துறை பொறியாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலும், புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் மின் துறை தலைமை அலுவலகம் முன் சங்கத் தலைவா் விஜயன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பொதுச் செயலா் தணிகாசலம், பட்டதாரி பொறியாளா்கள் சங்கத் தலைவா் ரமேஷ், பொதுச் செயலா் தணிகைவேல் ஆகியோா் பேசினா்.

கோரிக்கைளை அரசு நிறைவேற்றாவிட்டால், காலவரையற்ற பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மின் துறை பொறியாளா்கள் சங்கத்தினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT