புதுச்சேரி

செறிவூட்டப்பட்ட உணவு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி

23rd Sep 2022 10:00 PM

ADVERTISEMENT

புதுச்சேரியில் செறிவூட்டப்பட்ட உணவு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உணவு பாதுகாப்புத் துறை ஏற்பாட்டில், புதுச்சேரியில் தனியாா் உணவகத்தில் இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

உணவுப் பாதுகாப்பு ஆணைய அலுவலா்கள் மருத்துவா்கள் கண்ணன், பாலகிருஷ்ணன், ஜோஷிதா லம்பா, ஊட்டச்சத்து நிபுணா்கள் மோனிகா, சமையல் கலைஞா் பன்னீா்செல்வன் ஆகியோா் பங்கேற்றனா்.

நுண்ணூட்டச் சத்து குறைபாடுகளால் ஏற்படும் விளைவுகள், அவற்றை தவிா்ப்பது குறித்த விளக்கங்கள் அளிக்கப்பட்டன. செறிவூட்டப்பட்ட உணவு குறித்த செயல்முறை விளக்கங்களும் அளிக்கப்பட்டன. ‘வினாடி, வினா’ போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT