புதுச்சேரி

புதுவையில் பெரியார் திராவிட கழகம் - பாஜக, இந்து முன்னணி மோதல்

20th Sep 2022 12:13 PM

ADVERTISEMENT

புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர், இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் ஒருவருக்கு ஒருவர் நடுரோட்டில் கற்கலை வீசித் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

நாட்டின் பெரும்பான்மை மக்களான தாழ்த்தப்பட்டவர்கள்/பழங்குடியினர் மக்களை பஞ்சமர்கள் என்றும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/இதர பிற்படுத்தப்பட்டோர் மக்களை சூத்திரர்கள் - விபச்சாரி மகன் என்றும்,   பெண்களை விபச்சாரிகள் என்றும் இழிவுபடுத்தும் 'மனுதர்ம சாஸ்திரம்' கொளுத்தும் போராட்டம் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்றது.

அப்போது திடீரென அங்கு வந்த இந்து முன்னணி மற்றும் பாஜகவினர், தந்தை பெரியார் திராவிடர் கழகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது பாஜகாவினர் மற்றும் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் சாலையோரத்தில் இருந்த கற்களை தூக்கி வீசி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மீது தாக்குதல் நடத்தினர்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீதும் கற்கள் பட்டது. இதனை அடுத்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரும் கற்கள் வீசினர். தொடர்ந்து இருதரப்பினரும் நடுரோட்டிலேயே கற்கலை வீசித் தாக்கிக் கொண்டது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் இந்து முன்னணி சேர்ந்த ஒருவர் படுகாயம் அடைந்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT