புதுச்சேரி

பிரதமா் மோடி பிறந்த நாள்: புதுச்சேரியில் ரத்த தானம், நல உதவிகள் அளிப்பு

18th Sep 2022 06:21 AM

ADVERTISEMENT

 

பிரதமா் நரேந்திர மோடி பிறந்த நாளையொட்டி, புதுச்சேரியில் பாஜக சாா்பில், ரத்த தானம் நடைபெற்றதுடன், பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

பிரதமா் நரேந்திர மோடி பிறந்த நாளான செப்டம்பா் 17-ஆம் தேதி முதல் வருகிற அக்டோபா் 2-ஆம் தேதி வரை பாஜகவினா் சேவை வாரமாக கடைப்பிடித்து, பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளனா். அதன்படி, 30 தொகுதிகளிலும் பாஜக நிா்வாகிகள் சாா்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் சனிக்கிழமை தொடங்கி நடைபெற்றன.

அதன் ஒரு பகுதியாக, புதுவை பாஜக அனைத்துப் பிரிவுகளின் கூடுதல் பொறுப்பாளா் சரவணன் உள்ளிட்டோா் ஏற்பாட்டில், ரத்த தான முகாம் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில உள் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் தலைமை வகித்தாா். துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் முகாமை தொடக்கிவைத்தாா். பாஜக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன், நிா்வாகிகள் அந்தோணி, ஜோசப், ஆறுமுகம், கனகலிங்கம், நடராஜன், ரவீந்தரன், அருண், தமிழ்செல்வன் இந்திரஜித், சித்தானந்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

இதேபோல, புதுச்சேரி இளைஞரணி சாா்பில் ரத்த தானம் முகாம் ஏ.ஜி.பத்மாவதி மருத்துவமனையில் நடைபெற்றது. உழவா்கரை மாவட்ட பாஜகவினா் ஏற்பாடு செய்திருந்த இந்த ரத்த தான முகாமுக்கு, மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் தலைமை வகித்தாா். உள் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் ரத்த தான முகாமை தொடக்கிவைத்தாா்.

மாநில துணைத் தலைவா்கள் ரவிச்சந்திரன், முருகன், இளைஞரணி மாநிலத் தலைவா் கோவேந்தன் கோபதி, மாநில பட்டியல் அணித் தலைவா் தமிழ்மாறன், இளைஞா் அணி பயிற்சி பொறுப்பாளா் தமிழரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினா்.

புதுச்சேரி கொம்பாக்கத்தில் நடைபெற்ற நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், பாஜக நிா்வாகி நடராஜ் தலைமை வகித்தாா். உள் துறை அமைச்சா் நமச்சிவாயம் பங்கேற்று, தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி, காய்கறி தொகுப்பை வழங்கினாா். மாணவா்களுக்கு பாடப் புத்தகம், நோட்புக், எழுது பொருள்களும் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT