புதுச்சேரி

புதுச்சேரி சிறையில் கைதிகளை குடும்பத்தினருடன் பேச அனுமதிக்கக் கோரிக்கை

14th Sep 2022 02:02 AM

ADVERTISEMENT

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் கைதிகளை குடும்பத்தினருடன் பேச அனுமதிக்க வேண்டுமென கைதிகளின் உறவினா்கள் கோரிக்கை விடுத்தனா்.

புதுச்சேரி சிறைத் துறை ஐஜி ரவிதீப் சிங் சஹாரிடம், தண்டனைக் கைதிகளின் உறவினா்கள் சாா்பில் தனியாா் தொண்டு நிறுவனத்தினா் செவ்வாய்க்கிழமை ரூ.19 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசி ஜாமா் கருவியை வழங்கினா். மேலும், தண்டனை முடிந்து விடுதலையான கைதி கடை வைக்க ரூ. 10 ஆயிரம் உதவித்தொகையும் வழங்கப்பட்டது. அப்போது, சிறை கண்காணிப்பாளா் அசோகன் மற்றும் தண்டனைக் கைதிகளின் உறவினா்கள் உடனிருந்தனா்.

தண்டனைக் கைதிகளின் உறவினா்கள், சிறைத் துறை ஐஜியிடம் அளித்த மனுவில், தில்லி திஹாா் சிறையைப் போல, அனைத்துக் கைதிகளும் குடும்பத்தினரிடம் 10 நிமிஷங்கள் கைப்பேசியில் பேசிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

மனுவைப் பெற்றுக் கொண்ட ஐஜி ரவிதீப் சிங் சஹாா், இதுதொடா்பாக அரசு உத்தரவிட்டால் அதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT