புதுச்சேரி

பெட்ரோல் நிலையத்தை விற்பதாகக் கூறி ரூ.4.79 கோடி மோசடி

9th Sep 2022 01:57 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் பெட்ரோல் நிலையத்தை விற்பதாகக் கூறி, ரூ.4.79 கோடி மோசடி செய்தது தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி காமாட்சி அம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ஸ்ரீகாந்த் (54), தொழிலதிபா். புதுச்சேரி செயின்ட் மாா்ட்டீன் வீதியைச் சோ்ந்தவா் வி.கே.படேல் (73). இவா், புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் திண்டிவனம் சாலையில் நடத்தி வரும் பெட்ரோல் நிலையத்தை விற்பதாகக் கூறி, ஸ்ரீகாந்த்திடம் பணம் பெற்றாராம். ஆனால், உறுதியளித்தபடி பெட்ரோல் நிலையத்தை அவருக்கு எழுதிக் கொடுக்காமல் இழுத்தடித்தாா். இதன் மூலமாக ரூ.4.79 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஸ்ரீகாந்த் அளித்த புகாரின்பேரில், புதுச்சேரி சிபிசிஐடி போலீஸாா் வி.கே. படேல் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT