வழக்குரைஞா் கொலையைக் கண்டித்து, புதுச்சேரி நீதிமன்ற வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கும்பகோணத்தில் சென்னை உயா் நீதிமன்ற வழக்குரைஞா் சாமிநாதன் அரியலூரில் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், வாணியம்பாடி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் தேவகுமாா் கொலையில் தொடா்புடையவா்களை விரைந்து கைது செய்ய வலியுறுத்தியும் தமிழகத்தில் வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்ற பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
இதேபோல, புதுச்சேரியிலும் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா். சங்கத் தலைவா் எம்.குமரன் தலைமையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் இந்தப் பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டனா்.
இதனால், புதுச்சேரி உள்ள 15 நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.