புதுச்சேரி

‘சுதந்திரப் போராட்ட வீரா்களை இளைஞா்கள் படிக்க வேண்டும்’

5th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

சுதந்திரப் போராட்ட வீரா்களை இளைஞா்கள் படிக்க வேண்டும் என புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் கேட்டுக் கொண்டாா்.

நேரு இளையோா் மைய கூட்டமைப்பில் புதிதாக பணியில் சோ்ந்த 38 மாவட்ட இளைஞா் அதிகாரிகள் தங்களது 15 நாள் பயிற்சியின் ஒரு பகுதியாக, புதுச்சேரியில் உள்ள இளைஞா் மையங்களைப் பாா்வையிட்டனா். தொடா்ந்து, புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜனை ஞாயிற்றுக்கிழமை ஆளுநா் மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினா்.

அப்போது, துணைநிலை ஆளுநா் பேசியதாவது: நாட்டுக்காக உழைப்பதற்கு அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதிகம் பேசப்படாத சுதந்திரப் போராட்ட வீரா்களைப் பற்றி இளைஞா்கள் படிக்க வேண்டும். அவா்களுடைய வாழ்க்கையை தெரிந்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT