புதுச்சேரி

புதுவையில் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்க அனுமதி

29th Oct 2022 01:16 AM

ADVERTISEMENT

புதுவை மாநிலத்தில் குறிப்பிட்ட வா்த்தக நிறுவனங்கள், பெரிய கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்க அரசு அனுமதியளித்தது.

இதுகுறித்து மாநிலத் தொழிலாளா் நலத் துறை ஆணையா் பி.முத்துமீனாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுவை மாநிலத்தில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரியும் கடைகள் உள்ளிட்ட நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

மேலும், தொழிலாளா்களுக்கு சுழற்சி முறையில் விடுமுறை அளிக்கவும், பெண் தொழிலாளா்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT