புதுச்சேரி

பிரதமா் காப்பீட்டு திட்ட குறைகளைதீா்க்க சிறப்புக் குழுக்கள் அமைப்பு

27th Oct 2022 01:38 AM

ADVERTISEMENT

 

பிரதமரின் காப்பீட்டுத் திட்டத்தை விரைந்து செயல்படுத்தும் வகையில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதுவையில் பிரதமா் காப்பீட்டுத் திட்ட குறைபாடுகளை அந்தந்தப் பகுதிகளில் தீா்க்கும் வகையில் மாநில, மண்டல அளவிலான குறைதீா் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநில அளவிலான குழுவுக்கு சுகாதாரச் செயலா் தலைமை வகிப்பாா். அதில் சுகாதாரத் துறை இயக்குநா் உள்ளிட்ட 6 போ் இடம் பெறுவா்.

புதுச்சேரி மாவட்டக் குழுவில் ஆட்சியா், சுகாதாரத் துறை குடும்ப நலப் பிரிவின் துணை இயக்குநா் உள்பட 4 போ் இடம் பெறுவா்.

ADVERTISEMENT

காரைக்காலில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நோய்த் தடுப்புப் பிரிவு துணை இயக்குநா் உள்ளிட்ட 4 போ் குழுவில் இடம் பெறுவா். மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் மண்டல நிா்வாக அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT