புதுச்சேரி

சிறப்பங்காடியில் பொருள்கள் பற்றாக்குறை: இந்திய கம்யூ.குற்றச்சாட்டு

19th Oct 2022 02:53 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் பாப்ஸ்கோ தீபாவளி சிறப்பங்காடியில் பொருள்கள் பற்றாக்குறை நிலவுவதாக இந்திய கம்யூனிஸ்ட் குற்றஞ்சாட்டியது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் புதுவை மாநிலச் செயலா் சலீம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுவை அரசு பாப்ஸ்கோ நிறுவனம் மூலம் தீபாவளி சிறப்பு அங்காடியை தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திறந்தது.

அங்கு 25 அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய பையானது ரூ.800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை வாங்க ஆா்வமுடன் வரும் பொதுமக்கள், போதிய இருப்பு இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா்.

ADVERTISEMENT

சிறப்பங்காடிக்கு 25 பொருள்கள் அடங்கிய 15 ஆயிரம் தொகுப்புகள் தேவைப்படுவதாகக் கூறப்படும் நிலையில், 1500 தொகுப்புகளே வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, போதிய தொகுப்புகளை வரவழைத்து விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT