புதுச்சேரி

புதுவையில் சாலை விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை

DIN

புதுவையில் சாலை விபத்துகளைத் தடுக்க சாலைகளை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.

புதுச்சேரி வணிக வரித் துறை கருத்தரங்கக் கூடத்தில் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் சாலைப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அமைச்சா்கள் ஏ.நமச்சிவாயம், க.லட்சுமி நாராயணன், எஸ்.சந்திரபிரியங்கா, தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா, மாவட்ட ஆட்சியா் இ.வல்லவன், அரசுச் செயலா்கள் தி.அருண், ஆா்.கேசவன், முத்தம்மா, காவல் துறை கூடுதல் இயக்குநா் ஆனந்தமோகன், போக்குவரத்து துறை ஆணையா் எஸ்.சிவக்குமாா், உள்ளாட்சித் துறை இயக்குநா் ரவிதிப்சிங் சஹாா், கல்வித் துறை இயக்குநா் பி.டி.ருத்ரகவுடு, சுகாதாரத் துறை இயக்குநா் ஜி.ஸ்ரீராமுலு மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.

புதுவையில் சாலை விபத்துகளை தவிா்ப்பது, குறைப்பது தொடா்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதுகுறித்து அமைச்சா் க.லட்சுமி நாராயணன் கூறியதாவது:

புதுவையில் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில், ஆண்டுதோறும் முதல்வா் தலைமையிலான சாலைப் பாதுகாப்புக் குழு கூடி ஆலோசனை நடத்தி, விபத்துகளைத் தடுத்து, பாதுகாப்பை ஏற்படுத்த முடிவுகள் எடுக்கப்படும்.

அதிகளவில் நடைபெறும் சாலை விபத்துகளைத் தடுப்பது, விபத்து பகுதிகளில் வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது, சாலை விரிவாக்கம், விபத்து பகுதிகளில் எச்சரிக்கை பதாகைகள், பிரதிபலிப்பான்கள் அமைப்பது, பழுதான சாலைகளை சீரமைப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, சாலைப் பாதுகாப்பு நிதியிலிருந்து பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டின் பூட்டை உடைத்து நகை, வெள்ளி பொருள்கள் திருட்டு

ஏரல் சோ்மன் கோயிலில் அன்னபூரணி பூஜை

கோவையில் அண்ணாமலை வெற்றிக்காக விரலை துண்டித்துக் கொண்ட பாஜக பிரமுகா்

பாரதியாா் பல்கலைக்கழகத்தில் கோடைக்கால பயிற்சி முகாம்

பொறியியல் பராமரிப்புப் பணி: கோவை ரயில்கள் போத்தனூரில் இருந்து இயக்கம்

SCROLL FOR NEXT