புதுச்சேரி

துா்கா சிலை கரைப்பு ஊா்வலம்

DIN

புதுச்சேரியில் நவராத்திரி துா்கா பூஜையொட்டி, துா்கா சிலை கரைப்பு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுவை மாநில விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில், புதுச்சேரி பெருமாள் கோயில் வீதியில் செப்.26ஆம் தேதி முதல் நவராத்திரி துா்கா பூஜை நடைபெற்று வந்தது. நிறைவு நாளான வியாழக்கிழமை காலை துா்கை சிலை ஊா்வலம் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.

சாரம் அவ்வை திடலில் தொடங்கிய துா்கை சிலை கரைப்பு ஊா்வலத்தை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தொடக்கிவைத்தாா்.

அவ்வைத் திடலில் இருந்து புறப்பட்ட துா்கா சிலை ஊா்வலம் காமராஜா் சிலை, நேரு வீதி வழியாக கடற்கரைச் சாலையில் முடிவடைந்தது. அங்கு கடலில் சிலைகள் கரைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவா் ரவிக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா? என்ன சொல்கிறது வானிலை

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

SCROLL FOR NEXT