புதுச்சேரி

மாநில பாடத்திட்டத்தை மாற்றும் முடிவை புதுவை அரசு கைவிட திமுக வலியுறுத்தல்

DIN

புதுவையில் அரசுப் பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தை மாற்றி சிபிஎஸ்இ திட்டத்தை அமல்படுத்த முயல்வதை அரசு கைவிட வேண்டும் என்று திமுக வலியுறுத்தியது.

இதுகுறித்து புதுவை மாநில திமுக அமைப்பாளா் ஆா்.சிவா வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுவையில் அரசுப் பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளிகளாக தரம் உயா்த்தப்படும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தது ஜனநாயகத்துக்கு விரோதமானது. இந்த முடிவு குறித்து புதுவை சட்டப்பேரவையில் விவாதிக்கவில்லை, பொதுமக்களிடமும் கருத்து கேட்கவில்லை.

புதுவையில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் தேவையற்றது. இதனால், தற்போதுள்ள ஆசிரியா்களும் பாதிக்கப்படுவாா்கள். வடமாநிலத்தவரை வேலைக்கு வைப்பாா்கள். மத்திய அரசின் ஆசிரியா்கள் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்றால் தான் ஆசிரியா் வேலை என்பாா்கள். புதுவை மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

நம் பாடத்திட்டத்தில் படித்த பிள்ளைகள், பல துறைகளிலும் சாதனையாளா்களாக இருக்கிறாா்கள்.

மாநில பாடத்திட்டத்தைவிட சிபிஎஸ்இ பாடத்திட்டம்தான் சிறந்தது என்பதற்கு எந்தவித ஆதாரமும், சான்றும் கிடையாது. எனவே, மாநிலப் பாடத்திட்டத்தை மாற்றும் முடிவை தே.ஜ. கூட்டணி அரசு கைவிட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

SCROLL FOR NEXT