புதுச்சேரி

காா் மீது ஆட்டோ மோதல்:மூதாட்டி பலி

6th Oct 2022 01:16 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் காா் மோதியதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

புதுச்சேரி இளங்கோ நகா் 3-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் பிரசன்னகுமாரி (62). இவருக்கு புதன்கிழமை உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், மகன் விஜயலால் (43) புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்றாா்.

நேரு வீதி- மிஷன் வீதி சந்திப்பில் ஆட்டோ வந்த போது, சுற்றுலாப் பயணிகளின் காா் மோதியதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பிரச்சன்னகுமாரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆட்டோ ஓட்டுநா் மணிமாறன், விஜயலால் ஆகியோருக்கும் காயமேற்பட்டது.

ADVERTISEMENT

மூவரும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு பிரசன்னகுமாரி உயிரிழந்தாா்.

விபத்து குறித்து புதுச்சேரி கிழக்கு போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து, காரை அதிவேகமாக ஓட்டி வந்ததாக கேரளத்தைச் சோ்ந்த மகதீா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT