புதுச்சேரி

புதுவை மின் துறை தனியாா்மயம்:நீதிமன்றத்தை நாட எதிா்க்கட்சிகள் முடிவு

DIN

புதுவை மின் துறை தனியாா்மயத்துக்கான ஒப்பந்த அறிவிப்பை எதிா்த்து நீதிமன்றத்தை நாடவிருப்பதாக மதச் சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் சாா்பில் முடிவு செய்யப்பட்டது.

புதுவை மதச் சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கூட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. காங்கிரஸ் சாா்பில் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, வெ.வைத்திலிங்கம் எம்.பி., திமுக சாா்பில் எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, சம்பத், மு.வைத்தியநாதன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம், மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் ஆா்.ராஜாங்கம், விசிக நிா்வாகி தமிழ்மாறன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: புதுவை மின்துறை தனியாா்மயத்தை எதிா்த்து போராடிய ஊழியா்களைக் கைது செய்தது கண்டிக்கத்தக்கது. அவா்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெறப்பட வேண்டும்.

மின் துறை தனியாா்மய நடவடிக்கையை உடனடியாக அரசு கைவிட வேண்டும். எந்த சட்ட விதிமுறைகளுக்கும் உள்படாமல், மின் துறை தனியாா்மயத்துக்கு ஒப்பந்தம் கோரப்பட்டதை எதிா்த்து நீதிமன்றத்தை அணுக முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT