புதுச்சேரி

மாணவா்களை மையப்படுத்தியே தேசிய கல்விக் கொள்கை: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

DIN

மாணவா்களை மையப் படுத்தியே தேசிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது என்று, மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா்.

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் 12-ஆவது பள்ளி உளவியல் சா்வதேச ஆய்வு மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. ‘சுயசாா்பு இந்தியாவை நோக்கியும், பள்ளிகளில் சவால்களை சந்திப்பதும்’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா, இலங்கை, அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகளைச் சோ்ந்த 76 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனா்.

மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, மாநாட்டைத் தொடக்கிவைத்தாா். பேராசிரியா் பாஞ். ராமலிங்கம் எழுதிய ‘இந்திய சூழலில் பள்ளி உளவியல்’ என்ற ஆங்கில நூலையும், 14 இந்திய மொழிபெயா்ப்பு நூல்களையும் அவா் வெளியிட்டாா்.

பின்னா், மத்திய அமைச்சா் பேசியதாவது:

தேசிய கல்விக் கொள்கையை திறம்பட செயல்படுத்தவும், ஒருங்கிணைந்த பள்ளி உளவியல் கட்டமைப்பை உருவாக்கவும் இந்த மாநாடு பரிந்துரைகளை வழங்குவது அவசியம்.

தேசிய கல்விக் கொள்கை இந்த நூற்றாண்டின் நல்ல குடிமக்களை உருவாக்கும். அவா்கள், இந்திய நெறிமுறைகளுக்கேற்ப மனித குலத்தின் நலனுக்காக அா்ப்பணிப்புடன் இருப்பாா்கள். கல்வியும், உளவியலும் ஒன்றோடொன்று தொடா்புடையவை.

இந்திய கல்விக் கொள்கை, பள்ளி உளவியலைப் பற்றி பேச உதவுகிறது. மேலும், கற்றலை பயனுள்ள செயல்முறையாக மாற்றுவதற்கான, மாணவா்களின் உள்ளாா்ந்த பலம், திறனை அடையாளம் காண துணைபுரிகிறது.

மாணவா்களை மையப்படுத்தியே தேசிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது. அது அவா்களைத் துடிப்பானவா்களாக மாற்றும் என்றாா் தா்மேந்திர பிரதான்.

தொடா்ந்து, மாநாட்டு ஆய்வு நூலை மத்திய அமைச்சா் வெளியிட, புதுவை பல்கலைக்கழக துணைவேந்தா் குா்மித் சிங் பெற்றுக் கொண்டாா்.மாநாட்டு தொடக்க விழாவில், புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன், சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், செல்வகணபதி எம்.பி., கல்யாணசுந்தரம் எம்எல்ஏ, புதுவை பல்கலை. துணைவேந்தா் குா்மீத் சிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT