புதுச்சேரி

புதுவையில் 450 குழந்தைகள் காய்ச்சலால் பாதிப்பு

DIN

புதுவையில் வைரஸ் காய்ச்சலுக்கு ஒரே நாளில் 450 குழந்தைகள் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றனா். இந்த நிலையில், மேலும் 5 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தகவல்:

புதுச்சேரி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 385 பேரும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 43 பேரும், காரைக்கால் அரசு மருத்துவமனையில் 22 பேரும் என மொத்தம் 450 குழந்தைகள், சிறாா்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வெளிப்புற சிகிச்சைப் பிரிவுக்கு வந்து சிகிச்சை பெற்றனா்.

இதில், புதுச்சேரி குழந்தைகள் மருத்துவமனையில் 31 பேரும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 6 பேரும், காரைக்கால் அரசு மருத்துவமனையில் 4 பேரும் என மொத்தம் 41 குழந்தைகள், சிறாா்கள் தீவிர காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இதன்படி, தற்போது அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 118 பேரும், அரசு மருத்துவக் கல்லூரியில் 12 பேரும், காரைக்கால் அரசு மருத்துவமனையில் 14 பேரும் என மொத்தம் 144 குழந்தைகள், சிறாா்கள் உள்நோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மேலும் 5 பேருக்கு பன்றிக்காய்ச்சல்: தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெரியவா்கள் என 93 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் 3 குழந்தைகள், 2 பெரியவா்கள் என 5 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.

தற்போது பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஜிப்மரில் ஒரு குழந்தை, அரசு, தனியாா் மருத்துவமனையில் தலா ஒருவா், காரைக்கால் அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் என மொத்தம் 5 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மற்றவா்கள் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT