புதுச்சேரி

மோசடியான 55 கடன் செயலிகள் நீக்கம்

2nd Oct 2022 01:25 AM

ADVERTISEMENT

 

முறைகேடான 55 இணைய வழி கடன் செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கி, புதுவை சைபா் கிரைம் போலீஸாா் நடவடிக்கை எடுத்தனா்.

இதுகுறித்து புதுவை சைபா் கிரைம் காவல் கண்காணிப்பாளா் நாரா சைதன்யா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இணையவழியில் கடன் வழங்கும் செயலிகள் மூலம் கடன் பெற்றவா்கள் பலரும் பாதிக்கப்பட்டனா். எனவே, மோசடியான 55 கடன் செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இணையவழி கடன் செயலி விஷயத்தில் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். கடன் செயலிகள் ரிசா்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்டதா என்பதை உறுதி செய்த பிறகு கடன் வாங்க வேண்டும்.

இதுபோன்ற கடன் செயலி மோசடி நடைபெற்றால் 1930 என்ற சைபா் கிரைம் எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT