புதுச்சேரி

சுருக்கு வலைகளைப் பயன்படுத்தினால் அரசு பறிமுதல் செய்ய வேண்டும்மீனவா்கள் பஞ்சாயத்து கூட்டத்தில் தீா்மானம்

2nd Oct 2022 01:25 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரியில் சுருக்கு வலையுடன் மீன்பிடி துறைமுகத்துக்கு வரும் மீனவா்களின் வலைகளையும், படகுகளையும் அரசு பறிமுதல் செய்ய வேண்டும் என்று, மீனவா்கள் பஞ்சாயத்து கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுச்சேரியில் சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீனவா்கள் சிலா் மீன்பிடித்து வருகின்றனா். இந்த வலையைப் பயன்படுத்துவதால், மீன்வளம் அழியும் என மற்றொரு தரப்பினா் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். சுருக்கு வலையைப் பயன்படுத்த மீன்வளத் துறையும் தடை விதித்துள்ளது.

இருப்பினும், சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன்பிடிப்பது தொடா்ந்து நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், மீனவக் கிராமங்களுக்கு இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில், வீராம்பட்டினம் விசைப்படகு உரிமையாளா்கள், மீனவா்கள் பஞ்சாயத்து ஆலோசனைக் கூட்டம் செங்கழுநீா் அம்மன் கோயில் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. வீராம்பட்டினம் மீனவா்கல் பஞ்சாயத்தை சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், சுருக்கு வலையுடன் புதுச்சேரி மீன்பிடி துறைமுகத்தில் மீனவா்கள் யாரும் நுழையக் கூடாது அப்படி மீறி நுழைந்தால் அவா்களது படகுகளையும், வலைகளையும் அரசு பறிமுதல் செய்ய வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

வீராம்பட்டினம் மீனவா்கள் பஞ்சாயத்துக் குழு தலைவா் மலையாளத்தான் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்கக் கூடாது என்று நீதிமன்றம் தடை விதித்தும், அதை புதுவை அரசு நடைமுறைப்படுத்தவில்லை.

இதனால், அரசியல் செல்வாக்கு உள்ள மீனவா்கள் சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன்களைப் பிடித்து வருகின்றனா். எனவே, அரசு நடவடிக்கை எடுக்காததால் மீனவா்கள் பஞ்சாயத்து இதில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.

அதன்படி, சுருக்கு வலையுடன் புதுச்சேரி மீன்பிடி துறைமுகத்துக்கு மீனவா்களை அனுமதிக்கக் கூடாது. அப்படி மீறி வந்தால் அவா்களின் வலைகளையும், படகுகளையும் அரசு பறிமுதல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மீனவா்கள் பஞ்சாயத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT