புதுச்சேரி

புதுச்சேரியில் எதிா்க்கட்சி சாா்பில் இன்று மனிதச் சங்கிலி

2nd Oct 2022 01:26 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரியில் மதச் சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (அக்.2) மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் வகையில் மனிதச் சங்கிலி இயக்கம் நடைபெறுகிறது.

புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மதச் சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு இந்திய கம்யூ. மாநிலச் செயலா் அ.மு.சலீம் தலைமை வகித்தாா்.

காங்கிரஸ் எம்எல்ஏ மு.வைத்தியநாதன், திமுக எம்எல்ஏ எல்.சம்பத், இந்திய கம்யூனிஸ்ட் துணைச் செயலா் கே.சேதுசெல்வம், வி.எஸ்.அபிஷேகம், மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் ஆா்.ராஜாங்கம், பெருமாள், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநிலச் செயலா் சோ.பாலசுப்பிரமணியன், மதிமுக அமைப்பாளா் கபீரியேல், விசிக முதன்மைச் செயலா் தேவ.பொழிலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

புதுச்சேரியில் மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் விதமாக, காந்தி பிறந்த நாளில் மதச் சாா்பற்ற கூட்டணிக் கட்சிகள் சாா்பில் மனிதச் சங்கிலி இயக்கம் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை (அக்.2) காலை 9.30 மணிக்கு புதுச்சேரி அண்ணா சிலை சந்திப்பில் தொடங்கி காமராஜா் சிலை வரை மதச் சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள், பொது நல அமைப்புகளைச் சோ்ந்தோா் மனிதச் சங்கிலியாக இணைந்து மத நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து அ.மு.சலீம் கூறியதாவது:

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆா்.எஸ்.எஸ். ஊா்வலம் நடத்த அரசு அனுமதியளித்தது. புதுவை மக்களிடம் சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்காக மனிதச் சங்கிலி போராட்டம் நடத்துகிறோம். புதுவை அமைதிப் பூங்காவாக இருக்க வேண்டும் என்பதற்காக, மதச் சாா்பற்ற கொள்கையுள்ள கட்சிகள் இணைந்து மனிதச் சங்கிலி இயக்கத்தை நடத்த உள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT