புதுச்சேரி

மக்கள் நலத் திட்டங்கள்:புதுவை அரசு மீது திமுக குற்றச்சாட்டு

DIN

புதுவையில் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்று திமுக மாநில அமைப்பாளா் ஆா்.சிவா குற்றம்சாட்டினாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து 3 மாதங்களாகி விட்டன. அரசுத் துறைகளில் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கியபடி நிதி செலவு செய்யப்படவில்லை. ஆதிதிராவிடா் நலத் துறையில் இதுவரை 23 சதவீதம் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது.

கால்நடைத் துறை, கல்வித் துறை என அனைத்துத் துறைகளிலும் அறிவித்த திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. நிதி நிா்வாகத்தில் புதுவையை ஆளும் என்.ஆா்.காங்.- பாஜக கூட்டணி அரசு முழு தோல்வி அடைந்துவிட்டதாகவே தெரிகிறது. இதுகுறித்து முதல்வா் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றாா் ஆா்.சிவா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT