புதுச்சேரி

மாற்றுத் திறனாளிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள்

30th Nov 2022 03:04 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, புதுச்சேரி உப்பளம் பகுதியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அனிபால் கென்னடி எம்எல்ஏ போட்டிகளைத் தொடக்கிவைத்தாா்.

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை இயக்குநா் பத்மாவதி முன்னிலை வகித்தாா். புதுவையைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனா்.

அவா்களுக்கு சக்கர நாற்காலியில் அமா்ந்தவாறே சைக்கிள் இயக்குதல் உள்ளிட்டவை நடைபெற்றன.

ADVERTISEMENT

போட்டிகளில் வென்றவா்களுக்கு டிசம்பா் 3-ஆம் தேதி நடைபெறும் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தில் பரிசுகள் வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT