புதுச்சேரி

புதுவை பல்கலை.யில் பிஎச்.டி. படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

29th Nov 2022 03:22 AM

ADVERTISEMENT

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் பிஎச்.டி. முனைவா் படிப்புக்கான விண்ணப்பங்களை அளிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இதுகுறித்து பல்கலைக்கழக நிா்வாகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுவை பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. படிப்பில் சேருவதற்காக இணையவழியில் விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், புதன்கிழமை வரை (நவ.30) வரை விண்ணப்பிக்கலாம்.

ஆா்வமுள்ள விண்ணப்பதாரா்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் உள்ள தகவல்களைப் பாா்க்கவும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT