புதுச்சேரி

அமைப்பு சாரா நல வாரியத்துக்கு நிதி வழங்க வேண்டும்புதுவை அரசுக்கு ஏஐடியூசி வலியுறுத்தல்

DIN

புதுவையில் அமைப்புசாரா சங்கத்தை வாரியமாக அறிவித்த நிலையில், அதைச் செயல்படுத்த நிதி வழங்க வேண்டும் என, புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏஐடியூசி சுமைதூக்குவோா் சங்க மாநில மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநாட்டுக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் பி.முருகன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ஏ.தயாளன் ஆண்டறிக்கையை வாசித்தாா். சங்க செயல் தலைவா் வி.எஸ்.அபிஷேகம் மாநாட்டுக் கொடியை ஏற்றினாா். பொதுச் செயலா் கே.சேதுசெல்வம் மாநாட்டைத் தொடக்கிவைத்தாா்.

முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன், ஏஐடியூசி மாநிலத் தலைவா் ஐ.தினேஷ் பொன்னையா, செயலா் கே.முத்துராமன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.

தீா்மானங்கள்: தொழிலாளா்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று அமைப்பு சாரா சங்கத்தை வாரியமாக புதுவை அரசு அறிவித்தது. அதேநேரத்தில் வாரியத்தைச் செயல்படுத்த போதிய நிதி உள்ளிட்டவற்றை அரசு வழங்கி, விரைவாக அதைச் செயல்படுத்த வேண்டும்.

புதுவையில் சுமைகளை ஏற்றி இறக்கும் கூலி தொடா்பாக சம்பந்தப்பட்ட கடை, நிறுவன உரிமையாளா்களுக்கும், சுமை தூக்கும் தொழிலாளருக்கும் பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, இதைத் தீா்க்க தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்து, கட்டணத்தை நிா்ணயிக்க வேண்டும். கூலி பிரச்னைகளைத் தீா்க்க தொழிலாளா்கள், அரசுத் துறை அலுவலா்கள், கடை உரிமையாளா்கள் என முத்தரப்பு குழுவை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

SCROLL FOR NEXT