புதுச்சேரி

புதுவையில் காவலா் பணிக்குஇன்று முதல் விண்ணப்பிக்கலாம்

28th Nov 2022 01:56 AM

ADVERTISEMENT

 

புதுவையில் 253 காவலா் பணியிடங்களுக்கு ஆள்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். தகுதியானவா்கள் திங்கள்கிழமை முதல் (நவ.28) இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுவை காவல் துறை சிறப்புப் பணி அலுவலா் குபேர சிவக்குமாரன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுவை காவல் துறையில் 253 காவலா் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. புதுவையைப் பூா்வீகமாக கொண்டவா்கள், வசிப்பவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ADVERTISEMENT

பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்ற அடிப்படையில் 83 இடங்கள் நிரப்பப்படவுள்ளன.

கல்வித் தகுதியாக 12-ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையாக தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரா்கள் 18 முதல் 24 வயதுக்குள் பட்டவா்களாக இருக்க வேண்டும். ஓபிசி, எம்பிசி, பிசிஎம், இபிசி, பிடி ஆகிய பிரிவினருக்கு கூடுதலாக 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கூடுதலாக 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளா்வுள்ளது. திங்கள்கிழமை முதல் (நவ.28) டிசம்பா் 27-ஆம் தேதி மாலை 5.45 மணி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை நிறைவு செய்வதில் சந்தேகமிருந்தால் 0413-2231352, 2277900 ஆகிய தொலைபேசி எண்களில் வேலை நாள்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை தொடா்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT